தலைமுடி உதிர்வதை தடுக்க எளிய இயற்கை வழிகள்
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி இன்றைய காலகட்டத்தில் எதிர் நோக்கும் பெரிய பிரச்சினை முடி உதிர்தல் ஆகும். இதனை வீட்டிலே எளிய முறையில் தடுக்க இயற்கை குறிப்புகள் உள்ளன.அவற்றை பின்பற்றுவதனால் தலைமுடி உதிர்வை தடுக்க முடியும் தலைமுடி உதிர்வை தடுக்க சில குறிப்புகள்
1. தேவையான பொருட்கள்:-
வேப்பிலை
எலுமிச்சை சாறு
- செய்முறை:-
வேப்பிலையையும், எலுமிச்சை சாற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இந்த கலவையை தலைமுடியின் ஸ்கால்ப்பில் நன்றாக அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு தலையை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும் இதை வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும், முடி உதிர்தல் குறையும் .2. தேவையான பொருட்கள்:-
வெந்தயம் - 2 ஸ்பூன்
கருவேப்பிலை-ஒரு பவுல்
தேங்காய் எண்ணெய்
செய்முறை:-
கடாய் ஒன்றில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் எடுத்து சூடாக்கி அதில் 2 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து கொள்ளவும்.பின்னர் அதில் ஒரு பவுல் கருவேப்பிலையை சேர்த்து சூடாக்கவும்.எண்ணெயின் நிறம் மாறியவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
கடாய் ஒன்றில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் எடுத்து சூடாக்கி அதில் 2 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து கொள்ளவும்.பின்னர் அதில் ஒரு பவுல் கருவேப்பிலையை சேர்த்து சூடாக்கவும்.எண்ணெயின் நிறம் மாறியவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
இதை உங்கள் தலைமுடியின் ஸ்கால்ப்பில் அப்ளை செய்யுங்கள். ஒரு மணி நேரம் கழித்து நன்றாக தலையை தேய்த்து குளிக்கவும்.இதை வாரத்திற்கு இருமுறை செய்து வர தலைமுடி உதிர்தல் நின்று தலைமுடி அடர்த்தியாக வளரும். 3. தேவையான பொருட்கள்:-
வெங்காயம்
வெங்காயம்
செய்முறை:- வெங்காயத்தை நன்றாக அரைத்து அதன் சாற்றை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை உங்கள் தலைமுடியின் ஸ்கால்ப்பில் நன்றாக அப்ளை செய்து 30 நிமிடம் கழித்து கழுவுங்கள்.இதை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறைந்து தலைமுடி அடர்த்தியாக வளரும்.
Comments
Post a Comment