7 நாட்களில் முகம் பள பள வென ஜொலிக்க வேண்டுமா? இதோ இயற்கை வழிகள்
முகத்தின் அழகை அதிகரிக்க இப்போது பெண்களாக இருந்தாலும் சரி , ஆண்களாக இருந்தாலும் சரி அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர்.
முகத்தின் அழகை அதிகரிக்க, முகம் பள பள வென ஜொலிக்க இயற்கை அழகு குறிப்புகள் உள்ளன.அவற்றை பின்பற்றுவதால் உங்கள் அழகை அதிகரிக்க முடியும்.
பேஸ் ஸ்கிரப்
ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள், இந்த பவுலில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு, 1/4 ஸ்பூன் கடலை மாவு, 1/4 ஸ்பூன் எலுமிச்சை சாறு கடைசியாக ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை முகத்தில் நன்றாக அப்ளை செய்து வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.5 நிமிடம் மசாஜ் செய்தவுடன் முகத்தை தூய நீரினால் கழுவவும்.இதை வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் உங்கள் முகம் பளபளப்பாகும்
முகக் கருமை நீங்க
ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள், இந்த பவுலில் 2 ஸ்பூன் அரிசி மாவு,1/4 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கடைசியாக 3 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்தக் கலவையை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 30 நிமிடம் கழித்து தூய நீரினால் கழுவவும் இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வருவதனால் முகக் கருமை நீங்கி பளிச்சிடும் சருமத்தை பெற முடியும்.



Comments

Popular Posts