ஒரு வாரத்தில் முடி அடர்த்தியாக வேகமாக வளர வேண்டுமா? இதோ அதற்கான வழிகள்
ஒரு வாரத்தில் முடி அடர்த்தியாக வேகமாக வளர வேண்டுமா? இதோ அதற்கான வழிகள்

எல்லோருக்கும் கறு கறு என்று நீளமான முடி வளரனும் என்று ஆசை தான், ஆனால் சில காரணங்களால் கூந்தல் வளர்ச்சி தடைப்படுகின்றன.அப்படியானால் கூந்தல் சீக்கிரமாக வளர என்ன செய்ய வேண்டும்.இந்த குறிப்புகளை பின்பற்றுவதனால் கூந்தல் மிகவும் வேகமாகவும் , அடர்த்தியாகவும் ஒரே வாரத்தில் கூந்தல் வளர்ச்சியை நீங்கள் பெறலாம்.
.
தலைமுடியில் அதிகப்படியான பொடுகு காணப்படுமாயின் தலைமுடி வளர்ச்சி தடைபடும்.பொடுகு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தலை வரண்டு போதல், அப்படி இல்லை என்றால் தலையில் பூஞ்சை தொற்று காணப்படல் இதை நீங்குவதற்கு நீங்கள் ஆன்டி டிரான்ரப் சம்போ பயன்படுத்தலாம்.ஆனால் அதை பயன்படுத்தும் பொழுது அதில் சேர்ந்திருக்கும் இரசாயனப் பொருட்களால் தலைமுடிக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இந்த பொடுகு தொல்லையில் இருந்து விடுபஒரு வாரத்தில் முடி அடர்த்தியாக வேகமாக வளர வேண்டுமா? இதோ அதற்கான வழிகள்
    1. ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த பவுலில் 2 ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை தலைமுடியின் ஸ்கால்ப்பில் நன்றாக அப்ளை செய்யுங்கள்.பின் 1/2 மணி நேரம் அப்படியே வைத்திருந்து தலையை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும்.   இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வர தலையில் உள்ள பொடுகு அனைத்தும் நீங்கி தலைமுடி நன்கு வளரும்.    
      தலைமுடி அடர்த்தியாக, நீளமாக வளர கருவேப்பிலை எண்ணெய்
      கருவேப்பிலை தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் சிறந்ததாகும்.இந்த கருவேப்பிலையை பயன்படுத்தி எண்ணெய் தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.          

      ஒரு பவுல் கருவேப்பிலையை எடுத்து நன்கு கழுவி அரைத்து வைக்கவும்.பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் அரைத்த கருவேப்பிலையை சேர்த்து நன்றாக காய்ச்சி கொள்ளவும்.எண்ணெய் பச்சை நிறமாக மாறியவுடன் அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவைத்து வடிகட்டி தலையில் நன்றாக அப்ளை செய்யுங்கள்.பின் ஒரு மணி நேரம் கழித்து தலை அலசலாம்.இதை வாரத்தில் இரு முறை பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் கறு கறு வென மிக வேகமாக வளரும்.

      தலைமுடி வளர்ச்சிக்கு கெயார் மாஸ்க்
    2. நாம் எமது தலைமுடியை எந்தளவு கவனிக்கின்றோமோ அந்தளவிற்கு எமக்கு அழகினை தருகின்றது எமது தலைமுடி. அதற்கான கெயார் மாஸ்க்கை இப்பொழுது பார்ப்போம்.
      முதலில் ஒரு பவுலை எடுத்து அதில் 4 ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் தேன் அடுத்து ஒரு முட்டை எடுத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை தலைமுடியின் ஸ்கால்ப்பில் நன்றாக அப்ளை செய்யுங்கள்.பின் ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருந்து தலையை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும்.இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

Comments

Popular Posts