ஒரு வாரத்தில் பளிச்சிடும் சருமத்தை பெற எளிய இயற்கை குறிப்புகள்
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் சரும அழகில் கவனம் செலுத்தி வருகின்றனர்.இதனை இலகுபடுத்துவதற்காக வீட்டிலேயே சருமத்தினை இயற்கை முறையில் அழகுப்படுத்தி ஒரு வாரத்தில் பளிச்சிடும் சருமத்தை பெற பின்வரும் அழகு குறிப்புகளை பின்பற்றவும்.
1. தேவையான பொருட்கள்:-
மஞ்சள்
காய்ச்சாத பால்
எலுமிச்சை சாறு
மஞ்சள்
காய்ச்சாத பால்
எலுமிச்சை சாறு
ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் 1/4 ஸ்பூன் மஞ்சள்,2 ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.பின்னர் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள்.1/2 மணி நேரம் கழித்து தூய நீரினால் கழுவ வேண்டும்.இதை வாரத்திற்கு இருமுறை செய்து வர சருமம் பளபளக்கும்.
2. தேவையான பொருட்கள்:-
காய்ச்சாத பால்
தேன்
ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் 3 ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடங்களின் பின்னர் தூய நீரினால் கழுவவும்.இதை வாரத்திற்கு ஒரு முறை செய்து வர சருமம் பளிச்சிடும்.
3. தேவையான பொருட்கள்:-
காய்ச்சாத பால்
கற்றாழை ஜெல்
ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் 4 ஸ்பூன் காய்ச்சாத பால் ஊற்றி அதனுள் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடங்களின் பின்னர் தூய நீரினால் கழுவவும்.இதை வாரத்திற்கு இருமுறை செய்து வர சருமம் பளபளக்கும்.
Comments
Post a Comment